இந்திய ஆக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளர் கொரோனாவால் பாதிப்பு


இந்திய ஆக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளர் கொரோனாவால் பாதிப்பு
x

இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளருமான எம்.கே.கவுசிக் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியின் வீரரும், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளருமான 66 வயது எம்.கே.கவுசிக் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். ‘தற்போது எனது தந்தையின் உடல் நிலை சீராகவும் இல்லை. அதேநேரத்தில் கவலை அளிக்கும் வகையிலும் இல்லை. ஆனால் அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இரவு நேரத்தில் குறைவது தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது’ என்று கவுசிக்கின் மகன் எசன் நேற்று கூறினார். தனது தாயாரின் உடல் நிலை தேறி வருவதாகவும், இந்த வாரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ’் செய்யப்படுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story