சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவராக நரிந்தர் பத்ரா மீண்டும் தேர்வு


சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவராக நரிந்தர் பத்ரா மீண்டும் தேர்வு
x
தினத்தந்தி 22 May 2021 8:43 PM GMT (Updated: 22 May 2021 8:43 PM GMT)

சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவராக நரிந்தர் பத்ரா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

புதுடெல்லி, 

சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் நிர்வாகிகள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இதில் சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் தலைவராக தொடர்ந்து 2-வது முறையாக இந்தியாவைச் சேர்ந்த நரிந்தர் பத்ரா தேர்வு செய்யப்பட்டார். நரிந்தர் பத்ராவை எதிர்த்து பெல்ஜியம் ஆக்கி சங்க தலைவர் மார்க் கோட்ரான் போட்டி களத்தில் நின்றார். இதையடுத்து ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பத்ரா 63 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். கோட்ரான் 61 ஓட்டுகளுடன் தோல்வியை தழுவினார். பத்ரா இந்த பதவியில் 2024-ம் ஆண்டு வரை நீடிப்பார். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராகவும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராகவும் பத்ரா இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story