ஹாக்கி

மொகாலியில் உள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்துக்கு பல்பிர் சிங் சீனியர் பெயர் சூட்டப்பட்டது + "||" + The International Aggie Stadium in Mowgli was named after Balbir Singh

மொகாலியில் உள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்துக்கு பல்பிர் சிங் சீனியர் பெயர் சூட்டப்பட்டது

மொகாலியில் உள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்துக்கு பல்பிர் சிங் சீனியர் பெயர் சூட்டப்பட்டது
இந்திய ஆக்கி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியவரும், 1952-ம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சாதனை படைத்தவருமான பல்பிர்சிங் சீனியர் தனது 96-வது வயதில் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார்.

1948, 1952, 1956-ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியவரும், 1952-ம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக 5 கோல்கள் அடித்து சாதனை படைத்தவருமான பல்பிர்சிங் சீனியர் தனது 96-வது வயதில் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். 1975-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவரான பஞ்சாப்பை சேர்ந்த பல்பிர்சிங் சீனியர் அந்த மாநில விளையாட்டு துறையின் இயக்குனராகவும் பணியாற்றினார். ஆக்கியில் சிறந்து விளங்கிய பல்பிர் சிங்கின் சாதனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மொகாலியில் உள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்துக்கு ஒலிம்பியன் பல்பிர் சிங் சீனியர் சர்வதேச ஆக்கி ஸ்டேடியம் என்று பெயர் சூட்டப்படுவதாக பஞ்சாப் மாநில விளையாட்டுத் துறை மந்திரி ராணா குர்மித் சிங் சோதி மொகாலியில் நேற்று நடந்த அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அத்துடன் பல்பிர் சிங் சீனியரின் சாதனை பயணத்தை நினைவு கூறும் வகையில் சர்வதேச ஆக்கி போட்டி நடத்தப்படும் என்றும் மொகாலி ஸ்டேடியத்தில் அவருடைய உருவச்சிலை நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.