ஹாக்கி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு + "||" + Hockey India announces women’s squad for Tokyo Olympics 2020

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அனுபவத்தையும், இளமையையும் சரிசமமான கலவையாக கொண்டுள்ள 16 பேர் கொண்ட இந்திய அணியில் 8 வீராங்கனைகள் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் 
போட்டியில் விளையாடியவர்கள். 8 வீராங்கனைகளுக்கு இது முதலாவது ஒலிம்பிக் போட்டியாகும். அணியின் கேப்டனாக ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பெண்கள் அணி ஒலிம்பிக் போட்டியில் அடியெடுத்து வைப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே இந்திய அணி 1980, 2016-ம் ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது. 

இந்திய அணி வீராங்கனைகள் தற்போது பெங்களூருவில் உள்ள சாய் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி வருமாறு:-

கோல்கீப்பர்: சவிதா, பின்களம்: தீப் கிரேஸ் எக்கா, நிக்கி பிரதான், குர்ஜித் கவுர், உதிதா, நடுகளம்: நிஷா, நேஹா, சுஷிலா சானு, மோனிகா, நவ்ஜோத் கவுர், சலிமா டெடி, முன்களம்: ராணி ராம்பால், நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, வந்தனா கட்டாரியா, ஷர்மிளா தேவி.

தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெற்றி பெற்று பதக்கம் உறுதி செய்துள்ளார்.
2. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்திய வீரர் அவினாஷ் முகுந்த் சேபிள் தோல்வி அடைந்துள்ளார்.
3. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி ஸ்டேஜ் 2க்கு தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி இணை ஸ்டேஜ் 2க்கு தகுதி பெற்றுள்ளது.
4. ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-
5. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 2 வீர‌ர்களுக்கு கொரோனா
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் 2 வீர‌ர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.