ஹாக்கி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணி அறிவிப்பு + "||" + Indian men's hockey team for Tokyo Olympics announced

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணி அறிவிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணி அறிவிப்பு
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
16 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்துள்ள 10 வீரர்களுக்கு இது அறிமுக ஒலிம்பிக் போட்டியாகும். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ருபிந்தர் பால்சிங், சுரேந்தர் குமார், மன்தீப் சிங் ஆகியோர் மீண்டும் அணியில் அங்கம் வகிக்கின்றனர். காயம் காரணமாக கடந்த ஒலிம்பிக்கில் இருந்து விலகிய பிரேந்திர லக்ரா மீண்டும் தேர்வாகியுள்ளார். ஆகாஷ்தீப் சிங், ரமன்தீப் சிங் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் சமீபத்தில் கேப்டன் பொறுப்பை வகித்த மன்பிரீத் சிங் கேப்டனாக நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, 3 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்பெயின், ஜப்பான் ஆகியவை அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளாகும். ஒரு 
காலகட்டத்தில் ஆக்கியில் அசைக்க முடியாத அணியாக விளங்கிய இந்தியா 8 முறை தங்கப்பதக்கத்தை தனதாக்கி சரித்திரம் படைத்தது. கடைசியாக 1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய 
அணி அதன் பிறகு பதக்க மேடையில் ஏறியதில்லை. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஆக்கி அணி வீரர்கள் வருமாறு:-

கோல்கீப்பர்: ஸ்ரீஜேஷ், பின்களம்: ஹர்மன்பிரீத் சிங், ருபிந்தர் பால்சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், பிரேந்திர லக்ரா, நடுகளம்: ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட ஷர்மா, சுமித், முன்களம்: ஷாம்ஷெர் 
சிங், தில்பிரீத் சிங், குர்ஜந்த் சிங், லலித்குமார் உபாத்யாய், மன்தீப் சிங்.

தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 2 வீர‌ர்களுக்கு கொரோனா
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள கிராமத்தில் 2 வீர‌ர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற உகாண்டா நாட்டு வீரர் டோக்கியோவில் மாயம்
ஜப்பானில் காணமல் போன உகாண்டா நாட்டு ஒலிம்பிக் பளு தூக்கும் வீரரை போலீசார் தேடி வருகின்றனர்.
3. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் சிங் தகுதி
தஜிந்தர் சிங் தூர் 21.49 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்ததுடன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
4. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது.
5. டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு தகுதிபெற்றார்.