ஹாக்கி

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார் + "||" + PM Modi Leads Tributes As India Mourns "Colossal" Milkha Singh

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார்

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார்
கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் தடகள வீரர் மில்கா சிங் காலமானார்.

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா தொற்றால் மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த மாத தொடக்கத்தில் மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மில்கா சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா  உள்பட  தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு  பிரபலங்களும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இரங்கல் பதிவிட்டு வருகின்றனர்.