ஹாக்கி

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஹாக்கி பதக்க வாய்ப்பு: முழு விவரம் + "||" + Women's hockey at Tokyo Olympics: Preview, Guide, Schedule, Indian players

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஹாக்கி பதக்க வாய்ப்பு: முழு விவரம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஹாக்கி பதக்க வாய்ப்பு: முழு விவரம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஹாக்கி போட்டி 2021 ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 6 வரை ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஓய் கடலோர பூங்காவில் நடைபெற உள்ளது.
புதுடெல்லி

நீண்ட காலமாக, ஒலிம்பிக்கில் ஹாக்கி ஒரு ஆண்கள் அணி மட்டுமே பங்கு பெற்று வந்தது. பெண்கள் அணி கலந்து கொள்ள 72 ஆண்டுகள் ஆனது. மகளிர் ஹாக்கி 1980 கோடைகால ஒலிம்பிக்கில் பெண்கள் ஹாக்கி அணி அறிமுகமானது.


அப்போது ஆறு அணிகள் போட்டியிட்டன அதில்   ஜிம்பாப்வே பெண்கள் ஹாக்கி  அணிவெற்றி பெற்றது. அப்போதிருந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஜெர்மனி, கிரேட் பிரிட்டன் போன்ற பல நாடுகள் ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கியில்  தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி அணி போட்டி 11 வது முறையாக நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் 1980 ஆம் ஆண்டும் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி பங்குபெற்றது. தற்போது இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில்  3 வது முறையாக கலந்து கொள்ள போகிறது. 1980 ஆம் ஆண்டில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 4 வது இடத்தை பிடித்தது. 2018 ஆம் ஆண்டில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி தனது பிரிவின்  கடைசி நிலைக்கு தள்ளப்பட்டது.

தற்போதைய ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஹாக்கி போட்டியில் 12 நாடுகள் கலந்து கொள்கின்றன.  ஆறு  நாடுகளாக 2 குரூப்கள் பிரிக்கப்படுகின்றன.தங்கள் குழுவில் உள்ள ஒவ்வொரு அணி மற்றொரு அணியுடன்  ஒரு முறை விளையாடுகின்றன. ஒரு வெற்றிக்கு மூன்று புள்ளிகள் வழங்கப்படும், டிரா செய்தால் ஒரு புள்ளி கிடைக்கும். குழுவில் முதல் நான்கு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறுகின்றன.

ஒவ்வொரு குரூப்பிலும் உள்ள அணிகளைப் பார்ப்போம்.

குரூப்  ஏ : ஜெர்மனி, கிரேட் பிரிட்டன், இந்தியா, அயர்லாந்து, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா

குரூப்  பி:  அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா,சீனா,ஜப்பான்,நியூசிலாந்து, ஸ்பெயின்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஹாக்கி போட்டி 2021 ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 6 வரை ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஓய் கடலோர பூங்காவில் நடைபெற உள்ளது.

முழு அட்டவணையைப் பார்ப்போம்:


சனி 24 ஜூலை 18:30 - 22:15

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - வடக்கு பிட்ச்
குரூப் ஏ, நெதர்லாந்து & இந்தியா

சனி 24 ஜூலை 19:00 - 22:45

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - தெற்கு பிட்ச்
குரூப் ஏ, அயர்லாந்து & தென்னாப்பிரிக்கா

ஞாயிறு 25 ஜூலை 9:30 - 13:15

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - வடக்கு பிட்ச்
குரூப் ஏ, கிரேட் பிரிட்டன் & ஜெர்மனி
குரூப் பி, ஜப்பான் & சீனா

ஞாயிறு 25 ஜூலை 10:00 - 13:45

 ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - தெற்கு பிட்ச்
குரூப் பி, ஆஸ்திரேலியா & ஸ்பெயின்
குரூப் பி, நியூசிலாந்து & அர்ஜென்டினா

 திங்கள் 26 ஜூலை 10:00 - 13:45

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - தெற்கு பிட்ச்
குரூப் ஏ, நெதர்லாந்து & அயர்லாந்து
குரூப் பி, ஆஸ்திரேலியா & சீனா

திங்கள் 26 ஜூலை 18:30 - 22:15
ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - வடக்கு பிட்ச்
குரூப் ஏ, தென்னாப்பிரிக்கா & கிரேட் பிரிட்டன்
குரூப் பி, ஜப்பான் & நியூசிலாந்து

 திங்கள் 26 ஜூலை 19:00 - 22:45

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - தெற்கு பிட்ச்
குரூப் பி, அர்ஜென்டினா & ஸ்பெயின்
குரூப் ஏ, ஜெர்மனி & இந்தியா

புதன் 28 ஜூலை 9:30 - 13:15

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - வடக்கு பிட்ச்
குரூப் ஏ, நெதர்லாந்து & தென்னாப்பிரிக்கா
குரூப் பி, நியூசிலாந்து & ஸ்பெயின்

புதன் 28 ஜூலை 10:00 - 13:45

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - தெற்கு பிட்ச்
குரூப் ஏ, கிரேட் பிரிட்டன் & இந்தியா
குரூப் ஏ, ஜெர்மனி & அயர்லாந்து
 
புதன் 28 ஜூலை 18:30 - 22:15

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - வடக்கு பிட்ச்
குரூப் பி, ஜப்பான் & ஆஸ்திரேலியா
 
புதன் 28 ஜூலை 19:00 - 22:45

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - தெற்கு பிட்ச்
குரூப் பி, அர்ஜென்டினா & சீனா

வியாழன் 29 ஜூலை 18:30 - 22:15

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - வடக்கு பிட்ச்
குரூப் பி, ஸ்பெயின் & சீனா
குரூப் பி, ஜப்பான் & அர்ஜென்டினா

வியாழன் 29 ஜூலை 19:00 - 22:45

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - தெற்கு பிட்ச்
குரூப் ஏ, கிரேட் பிரிட்டன் & நெதர்லாந்து
குரூப் பி, நியூசிலாந்து & ஆஸ்திரேலியா

வெள்ளிக்கிழமை  30 ஜூலை 9:30 - 13:15

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - வடக்கு பிட்ச்
குரூப் ஏ, தென்னாப்பிரிக்கா & ஜெர்மனி
குரூப் ஏ, அயர்லாந்து & இந்தியா

 சனி 31 ஜூலை 9:30 - 13:15

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - வடக்கு பிட்ச்
குரூப் பி, சீனா & நியூசிலாந்து
குரூப் பி, அர்ஜென்டினா & ஆஸ்திரேலியா

 சனி 31 ஜூலை 10:00 - 13:45

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - தெற்கு பிட்ச்
குரூப் பி, ஜப்பான் & ஸ்பெயின்
குரூப் ஏ, இந்தியா & தென்னாப்பிரிக்கா

சனி 31 ஜூலை 18:30 - 22:15

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - வடக்கு பிட்ச்
குரூப் ஏ, ஜெர்மனி & நெதர்லாந்து
குரூப் ஏ, அயர்லாந்து & கிரேட் பிரிட்டன்

திங்கள் 2 ஆகஸ்ட் 9:30 - 13:45

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - வடக்கு பிட்ச்
பெண்கள் காலிறுதி (2 போட்டிகள்)

திங்கள் 2 ஆகஸ்ட் 18:30 - 22:45

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - வடக்கு பிட்ச்
பெண்கள் காலிறுதி (2 போட்டிகள்)

புதன் 4 ஆகஸ்ட் 10:30 - 12:15

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - வடக்கு பிட்ச்

பெண்கள் அரையிறுதி

புதன் 4 ஆகஸ்ட் 19:00 - 20:45

: ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - வடக்கு பிட்ச்

பெண்கள் அரையிறுதி
 
வெள்ளி 6 ஆக. 10:30 - 12:15

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - வடக்கு பிட்ச்

பெண்கள் வெண்கல பதக்கப் போட்டி

வெள்ளி 6 ஆகஸ்ட் 19:00 - 21:10

ஓய் ஹாக்கி ஸ்டேடியம் - வடக்கு பிட்ச்

பெண்கள் தங்கப் பதக்கம் போட்டி

பதக்க விழா

இந்திய அணி ஹாக்கி வீராங்கனைகள்

1. ராணி ராம்பால் (கேப்டன்)

2. சவிதா புனியா (கோல்கீப்பர்)

3. டீப் கிரேஸ் எக்கா (பாதுகாப்பு)

4. நிக்கி பிரதான் (பாதுகாப்பு)

5. குர்ஜித் கவுர் (பாதுகாப்பு)

6. உடிதா (பாதுகாப்பு)

7. நிஷா (நடுகள வீரர்)

8. நேஹா கோயல் (நடுகள வீரர்)

 9. சுஷிலா சானு புக்ரம்பம் (நடுகள வீரர்)

 10. மோனிகா மாலிக் (நடுகள வீரர்)

11. நவ்ஜோத் கவுர் (நடுகள வீரர்)

12. சலீமா தடே (நடுகள வீரர்)

13. நவ்னீத் கவுர் (முன்கள வீரர்)

14. லால்ரெம்சியாமி (முன்கள வீரர்)

15. வந்தனா கட்டாரியா (முன்கள வீரர்)

16. ஷர்மிளா தேவி (முன்கள வீரர்)

தொடர்புடைய செய்திகள்

1. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
2. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.
3. 2028- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை இடம் பெற செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்அறிவித்துள்ளது.
4. டோக்கியோ மாரத்தான்: மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்டாரா..? பிரான்ஸ் வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஒருவர் மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்ட நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
5. டோக்கியோ ஒலிம்பிக்: 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சாதனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் தங்கம் வென்றதுடன் சாதனை படைத்து உள்ளார்.