ஹாக்கி

கொரோனா பாதிப்பு எதிரொலி: 5 பேர் கொண்ட அணிகளுக்கான உலக ஆக்கி போட்டி தொடர் ஒத்திவைப்பு + "||" + COVID-19 forces FIH to postpone inaugural FIH World Hockey 5s to 2022

கொரோனா பாதிப்பு எதிரொலி: 5 பேர் கொண்ட அணிகளுக்கான உலக ஆக்கி போட்டி தொடர் ஒத்திவைப்பு

கொரோனா பாதிப்பு எதிரொலி: 5 பேர் கொண்ட அணிகளுக்கான உலக ஆக்கி போட்டி தொடர் ஒத்திவைப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக, 5 பேர் கொண்ட அணிகளுக்கான உலக ஆக்கி போட்டி தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் முதல்முறையாக 5 பேர் கொண்ட அணிகளுக்கான உலக ஆக்கி போட்டி தொடர் சுவிட்சர்லாந்தில் உள்ள லாசானேவில் வருகிற செப்டம்பர் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

முன்னதாக 5 பேர் கொண்ட அணிகளுக்கான உலக ஆக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச ஆக்கி சம்மேளனம் தெரிவித்திருந்திருந்தது. 

மேலும் 5 பேர் கொண்ட ஆக்கி உலகக் கோப்பை தொடரை அறிமுகப்படுத்தி வைப்பதன் மூலம் சர்வதேச ரீதியாக ஆக்கி விளையாட்டை மேலும் முன்னேற்ற முடியும் என்பதுடன், பிரசித்திப் பெறவைக்க முடியும் என்றும் ஆக்கி விளையாட்டில் முன்னிலையில் உள்ள அணிகளைத் தவிரவும், வளர்ந்துவரும் அணிகளையும் ஐந்து பேர் கொண்ட உலகக் கோப்பை தகுதி காண போட்டிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சர்வதேச ஆக்கி சம்மேளனம் தெரிவித்திருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா பாதிப்பு; இன்று 156 ஆக உயர்வு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 156 ஆக உயர்ந்து உள்ளது.
2. சென்னையில் கொரோனா பாதிப்பு 150 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 150 ஆக குறைந்து உள்ளது.
3. 'எனக்கும் கொரோனா' இருமிக்கொண்டே வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை
தடுப்பூசி போட மாட்டேன் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை நம்புவதாகவும் அது தன்னை மீட்க உதவும் என்றும் நடிகை கூறி உள்ளார்.
4. மக்களே எச்சரிக்கை..! கொரோனா வேகமாகப் பரவ வாய்ப்பு..! - நிதி ஆயோக்
கொரோனா அழிந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. ஏனெனில், பல நாடுகளில் கொரோனா தொற்று பல அலைகளாகத் தொடர்ந்து தாக்கி வருவதைக் காண முடிகிறது.
5. சென்னையில் கொரோனா பாதிப்பு 156 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 156 ஆக குறைந்து உள்ளது.