ஹாக்கி

ஒலிம்பிக் ஆக்கி போட்டி: நெதர்லாந்து உடனான லீக் போட்டியில் இந்திய மகளிரணி தோல்வி + "||" + Tokyo Olympics, Women's Hockey highlights: Netherlands beats India 5-1

ஒலிம்பிக் ஆக்கி போட்டி: நெதர்லாந்து உடனான லீக் போட்டியில் இந்திய மகளிரணி தோல்வி

ஒலிம்பிக் ஆக்கி போட்டி: நெதர்லாந்து உடனான லீக் போட்டியில் இந்திய மகளிரணி தோல்வி
ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் நெதர்லாந்து உடனான லீக் போட்டியில் இந்திய மகளிரணி தோல்வியடைந்தது.
டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மொத்தம் 11 தங்கப்பதக்கங்களுக்கான போட்டிகள் நடைபெறுகிறது.

ஒலிம்பிக் தொடரில் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஆக்கி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா 3 -1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்திய ஆண்கள் அணிக்கான காலிறுதிப்போட்டி நாளை தொடங்குகிறது.

இந்நிலையில் ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் நெதர்லாந்து உடனான லீக் போட்டியில் இந்திய மகளிரணி தோல்வியடைந்தது. முன்னதாக இந்த போட்டியில் தொடக்கம் முதலே நெதர்லாந்து ஆக்ரோஷமாக விளையாடியது. ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய அந்த அணி, முதல் கோல் அடித்து 1-0 என்று முன்னிலை பெற்றது. இதனையடுத்து வேகமெடுத்த இந்திய அணியில் ராணி ராம்பால் ஒரு கோலை அடித்து 1 - 1 என புள்ளிகளை சமநிலை படுத்தினார்.

இதன் பின்னர் சிறிது நேரத்திற்கு இரண்டு அணிகளுமே தடுப்பாட்டத்தில் ஈடுபட்டன. பின்னர் நெதர்லாந்து அணிக்கு மீண்டும் கிடைத்த ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி 2வது கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து அந்த அணி அடுத்தடுத்து 3 கோல்கள் அடிக்க, இறுதியில் 5-1 என்ற கணக்கில் நெதர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

1. நெதர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள்: 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி
நெதர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. புதுவகை கொரோனா பரவல்: தென் ஆப்பிரிக்கா- நெதர்லாந்து கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு.!
புதுவகை கொரோனா வைரஸ் பரவலால், தென் ஆப்பிரிக்கா- நெதர்லாந்து இடையேயான கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
3. டி-20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நெதர்லாந்து
நமீபியா அணிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 164 ரன்கள் எடுத்துள்ளது.