ஹாக்கி

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி: இந்தியா காலிறுதிக்கு முன்னேற்றம் + "||" + Mens Hockey Tournament: India advance to the quarterfinals

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி: இந்தியா காலிறுதிக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி:  இந்தியா காலிறுதிக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது.

டோக்கியோ,

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, உலகின் 9ம் நிலையிலுள்ள ஸ்பெயின் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இந்தியா, தனது முதல் லீக் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. அடுத்து பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 1-7 என்ற கோல் கணக்கில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. 

இந்நிலையில் 3வது ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள இந்தியா, அடுத்த ஆட்டத்தில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான அஜென்டினாவை நாளை (வியாழக்கிழமை) சந்திக்க இருக்கிறது.

இந்தியா தரப்பில், கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை பயன்படுத்தி கோலாக மாற்றியது.  எனினும், ஸ்பெயினுக்கு கிடைத்த வாய்ப்புகளை இந்தியா தடுத்து ஆடியது.  இந்திய கோல் கீப்பரும் கோல்களை அடிக்க விடாமல் ஆடியது அணிக்கு வலு சேர்த்தது.


தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டி; இந்திய வீராங்கனை இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
டோக்கியோ பாராஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
2. டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டி: இந்திய வில்வித்தை வீரர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் இந்திய வில்வித்தை வீரர் ராகேஷ் குமார் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
3. டோக்கியோ பாராஒலிம்பிக்: இந்தியாவின் பவீனா பட்டேல் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
டோக்கியோ பாராஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பவீனா பட்டேல் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
4. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் நடால் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.