ஹாக்கி

ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டி: அர்ஜென்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு இந்தியா தகுதி + "||" + Olympic men's competition: India qualify for quarterfinals by beating Argentina

ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டி: அர்ஜென்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு இந்தியா தகுதி

ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டி:  அர்ஜென்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு இந்தியா தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

டோக்கியோ,

32வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 7வது நாளான இன்று ஆடவர் ஆக்கி போட்டியில் ஏ பிரிவில் அர்ஜென்டினா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் விளையாடின.

இதில், முதல் இரு காலிறுதி நேரத்தில் கோல்கள் எதுவும் போடப்படவில்லை.  போட்டியின் 43வது நிமிடத்தில் இந்தியாவின் வருண் குமார் அடித்த கோல் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து இரு தரப்பிலும் கோல்கள் எதுவும் விழாத நிலையில், போட்டி முடியும் நேரத்தில் இந்திய அணியினர் அதிரடியாக விளையாடினர்.

போட்டியின் இறுதியில் 58வது நிமிடத்தில் விவேக் சாகர் அடித்த கோல் மற்றும் 59வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் அடித்த 2 கோல்கள் அணியின் வெற்றியை முடிவு செய்தன.

இதனால், 3-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.  தொடர்ந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ பாராஒலிம்பிக் வில்வித்தையில் ராகேஷ் குமார் காலிறுதிக்கு தகுதி
டோக்கியோ பாராஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ராகேஷ் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
2. டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை இறுதி போட்டிக்கு தகுதி
டோக்கியோ பாராஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
3. டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள்: இந்தியாவின் பவீனா பட்டேல் காலிறுதிக்கு தகுதி
டோக்கியோ பாராஒலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனா பட்டேல் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
4. ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி: இந்தியா - ஜெர்மனி சமநிலை
ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான முதல்பாதி ஆட்டத்தில் 3-3 என்ற கணக்கில் இந்தியா, ஜெர்மனி சமநிலை உள்ளது.
5. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி ஸ்டேஜ் 2க்கு தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி இணை ஸ்டேஜ் 2க்கு தகுதி பெற்றுள்ளது.