ஹாக்கி

ஆண்கள் ஆக்கி: இந்திய அணி 3-வது வெற்றி அர்ஜென்டினாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது + "||" + Men Hocky Indian team wins 3rd Falling Argentina Advanced to the quarterfinals

ஆண்கள் ஆக்கி: இந்திய அணி 3-வது வெற்றி அர்ஜென்டினாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது

ஆண்கள் ஆக்கி: இந்திய அணி 3-வது வெற்றி அர்ஜென்டினாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது
ஆண்கள் ஆக்கியில் இந்திய அணி 3-வது வெற்றி அர்ஜென்டினாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேற்றம்.
டோக்கியோ, 

டோக்கியோ ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்திய அணி தரப்பில் 43-வது நிமிடத்தில் வருண்குமார் பெனால்டி கார்னர் வாய்ப்பிலும், விவேக் சாகர் பிரசாத் 58-வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 59-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கடைசி 2 நிமிடங்களில் அடுத்தடுத்து அடிக்கப்பட்ட கோல்கள் இந்தியாவின் உதவிக்கு உதவியது.

4-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜப்பானை இன்று சந்திக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆண்கள் ஆக்கி: அரைஇறுதியில் இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல்
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று மோத உள்ளன.