ஹாக்கி

டோக்கியோ ஒலிம்பிக்; ஹாட்ரிக் கோல் அடித்து இந்திய மகளிர் ஆக்கி அணி வெற்றி + "||" + Tokyo Olympics; Indian women'team wins by scoring a hat trick

டோக்கியோ ஒலிம்பிக்; ஹாட்ரிக் கோல் அடித்து இந்திய மகளிர் ஆக்கி அணி வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக்; ஹாட்ரிக் கோல் அடித்து இந்திய மகளிர் ஆக்கி அணி வெற்றி
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணி ஹாட்ரிக் கோல் அடித்து தென்ஆப்பிரிக்காவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
டோக்கியோ,

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.  இதில் 9வது நாளான இன்று நடந்த ஏ பிரிவு மகளிர் ஆக்கி போட்டியில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடின.

இதில், இந்திய மகளிர் ஆக்கி அணி தென்ஆப்பிரிக்காவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடந்த மகளிர் ஆக்கி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதியை எட்ட கூடிய சூழலில் இந்தியா இருந்தது.  இந்த போட்டியின் முதல் 3 கால் மணிநேர போட்டியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இந்நிலையில், வாழ்வா, சாவா? என்ற நிலையில் இருந்த இந்திய அணியில் 57வது நிமிடத்தில் வீராங்கனை நவ்னீத் கவுர் ஒரு கோல் அடித்து அயர்லாந்து அணிக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

இதனால், போட்டி நேர முடிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.  இதனால், இந்திய மகளிர் ஆக்கி அணியின் காலிறுதி கனவு நனவாகியுள்ளது.

அயர்லாந்து அணியுடன் புள்ளிகள் கணக்கில் இந்தியா சமஅளவில் உள்ளது.  இதனை தொடர்ந்து ஏ பிரிவில், தென்ஆப்பிரிக்க குடியரசு அணிக்கு எதிராக இறுதி ஆட்டத்தில் இந்தியா இன்று விளையாடி வெற்றி பெற்றுள்ளது.  அயர்லாந்து அணி வலிமையான இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது.  இன்றைய போட்டியில் இந்திய அணி ஹாட்ரிக் கோல் அடித்தது வெற்றி பெற பெரிதும் உதவியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி: கர்நாடக மக்களுக்கு ஜே.பி.நட்டா நன்றி
கர்நாடகத்தில் 3 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது.
2. இந்திய அணி அபார வெற்றி: தொடரில் முன்னிலை பெற்றது
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.
3. ஷமி, பும்ராவின் பேட்டிங்கால் எழுச்சி: இங்கிலாந்தை பந்தாடியது, லண்டன் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
4. டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி ‘திரில்’ வெற்றி
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி ‘திரில்’ வெற்றி.
5. இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது.