இந்திய அணியின் எழுச்சிக்கு உதவிய சினிமா


இந்திய அணியின் எழுச்சிக்கு உதவிய சினிமா
x
தினத்தந்தி 2 Aug 2021 10:19 PM GMT (Updated: 2021-08-03T03:49:45+05:30)

இந்திய அணி லீக் ஆட்டங்களில் தொடர்ந்து 3 தோல்வியை சந்தித்ததால் கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறும் நிலைமை உருவானது.

பெண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி லீக் ஆட்டங்களில் தொடர்ந்து 3 தோல்வியை சந்தித்ததால் கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறும் நிலைமை உருவானது. ஆனால் கடைசி 2 லீக் ஆட்டங்களில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றி கண்டு கால்இறுதிக்குள் நுழைந்தது. சரிவில் இருந்து இந்திய அணி மீண்டதன் பின்னணில் சினிமா படம் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. தோல்வியால் துவண்டு போய் இருந்த இந்திய அணி வீராங்கனைகளுக்கு உத்வேகமும், தன்னம்பிக்கையும் அளிக்கக்கூடிய அந்த படத்தை பார்க்கும்படி தலைமை பயிற்சியாளர் ஜோர்ட் மர்ஜின் (நெதர்லாந்து) அறிவுத்தினார். அதனை பார்த்த பிறகு இந்திய அணியினர் களத்தில் கலக்கி உள்ளனர். ஆனால் அந்த படத்தின் பெயர் என்ன என்பதை வெளியிட பயிற்சியாளர் மறுத்து விட்டார். அந்த படம் உண்மையிலேயே உதவிகரமாகவும், ஊக்கம் அளிப்பதாகவும் இருந்தது என்று கேப்டன் ராணி ராம்பால் கூறியுள்ளார்.

Next Story