ஹாக்கி

ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி: இந்தியா - ஜெர்மனி சமநிலை + "||" + Men's Hockey: After the end of the first half of the game between India and Germany for bronze medal, the scoreline reads 3-3

ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி: இந்தியா - ஜெர்மனி சமநிலை

ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி: இந்தியா - ஜெர்மனி சமநிலை
ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான முதல்பாதி ஆட்டத்தில் 3-3 என்ற கணக்கில் இந்தியா, ஜெர்மனி சமநிலை உள்ளது.
டோக்கியோ,

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில்  வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஆக்கி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதி வருகின்றன. மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில் முதல் 2-ஆவது நிமிடத்திலேயே ஜெர்மனி அணி கோல் அடித்து முன்னணி வகித்தது. முதல் கால் ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்து. ஆனால் இந்தியாவால் முதல் கோலை பதிவு செய்ய முடியவில்லை.

ஆனால் இரண்டாம் கால் ஆட்டத்தில் தனி ஒருவனாக பந்தை விரட்டிச் சென்ற இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர் இந்தியாவுக்கான முதல் கோலை பதிவு செய்தார். ஆனால் அதன் பின்பு ஜெர்மனி 2 கோல்களை அடுத்தடுத்து விளாசி அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் மனம் தளராத இந்திய வீரர்கள் அடுத்து கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை கோலாக்கினார்.  இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் இந்தியாவுக்கான 3-ஆவது கோலை பதிவு செய்தார். இதனையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா 3, ஜெர்மனி 3 கோல் என சமநிலையில் இருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டி: அர்ஜென்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு இந்தியா தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.