பதக்கத்தை இழந்தது வேதனை அளிக்கிறது - ராணி ராம்பால்


பதக்கத்தை இழந்தது வேதனை அளிக்கிறது - ராணி ராம்பால்
x
தினத்தந்தி 7 Aug 2021 3:07 AM GMT (Updated: 2021-08-07T08:37:50+05:30)

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஆக்கியில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்தை தவற விட்டது.

தோல்வி குறித்து இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் கூறுகையில், ‘தொடக்கத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த நாங்கள் சமநிலையை எட்டியதுடன் 3-2 என்ற கணக்கில் முன்னிலையும் வகித்தோம். மிகவும் நெருக்கமாக வந்து தோல்வியை தழுவியது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. வெண்கலப்பதக்கத்தை வெல்ல முடியாதது எங்களுக்கு நிறைய வேதனை அளிக்கிறது. ஆனால் அணியில் உள்ள எல்லோரும் சிறந்த திறனை வெளிப்படுத்தினார்கள். 

எனவே அணியை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். ஒலிம்பிக் போட்டியில் 4-வது இடத்தை பிடிப்பது என்பது எளிதான காரியமல்ல. எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். எங்களது செயல்பாடு இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறோம்’ என்றார்.

Next Story