ஹாக்கி

மேலும் ஒரு இந்திய ஆக்கி வீரர் ஓய்வு + "||" + Also an Indian Aggie player retires

மேலும் ஒரு இந்திய ஆக்கி வீரர் ஓய்வு

மேலும் ஒரு இந்திய ஆக்கி வீரர் ஓய்வு
இந்திய ஆக்கி வீரர்களில் மேலும் ஒருவர் விடைபெற்றார்.
புதுடெல்லி,

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியில் இடம் பிடித்திருந்த ருபிந்தர் பால்சிங், பிரேந்திர லக்ரா நேற்று முன்தினம் ஓய்வு பெற்றனர். அவர்களைத் தொடர்ந்து மேலும் ஒரு இந்திய ஆக்கி வீரர் நேற்று விடைபெற்றார். அவரது பெயர் எஸ்.வி. சுனில். மூத்த வீரரான சுனிலுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் மற்றும் 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் முக்கிய வீரராக பங்காற்றினார். 2012, 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கிலும் விளையாடி இருக்கிறார்.

கர்நாடகாவைச் சேர்ந்த 32 வயதான சுனில் இந்திய அணிக்காக 264 ஆட்டங்களில் விளையாடி 72 கோல்கள் அடித்துள்ளார். ‘இந்திய அணிக்காக 14 ஆண்டுகள் விளையாடி விட்டேன். இளைஞர்களுக்கு வழிவிடுவதற்கு இதுவே சரியான நேரம் ’ என்று சுனில் கூறியுள்ளார்.