ஹாக்கி

சர்வதேச விருது: இந்திய ஹாக்கி வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு + "||" + Indians dominate International Hockey Federation's annual awards

சர்வதேச விருது: இந்திய ஹாக்கி வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு

சர்வதேச விருது: இந்திய ஹாக்கி வீரர்கள், வீராங்கனைகள்  தேர்வு
ரசிகர்கள் மூலம் தேர்வு செய்து வழங்கப்படும் இந்த விருதுகளில் இந்த முறை அதிகபட்சமாக 3,00,000 பேர் வாக்களித்துள்ளனர்.
டெல்லி 

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் வருடாந்திர விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. ரசிகர்கள் மூலம் தேர்வு செய்து வழங்கங்படும் இந்த விருதுகளில் இந்த முறை அதிகபட்சமாக  3,00,000 பேர் வாக்களித்துள்ளனர்.

இதில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியின் வீரர்,வீராங்கனைகள் அதிகபட்ச விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த ஆண்டின் சிறந்த ஹாக்கி வீரராக  இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங், சிறந்த ஹாக்கி வீராங்கனையாக குர்ஜித் கவுர் தேர்வாகியுள்ளார்.

சிறந்த பெண் கோல்கீப்பருக்கான விருது  இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் சவிதா புனியாவுக்கும்  , சிறந்த ஆண் கோல்கீப்பருக்கான விருது  இந்திய ஆண்கள்  ஹாக்கி அணியின்  கோல்கீப்பர்  பிஆர் ஸ்ரீஜேஷ்க்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பிரிவில் சிறந்த ரைசிங் ஸ்டார்க்கான விருது ஷர்மிளா தேவிக்கும் , ஆண்கள் பிரிவில் சிறந்த ரைசிங் ஸ்டார்க்கான விருது விவேக் பிரசாத்க்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஸ்ஜோர்ட் மரிஜ்னே மற்றும் ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் ஆகியோரும் தங்களது பிரிவில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்றது. அதே போல் பெண்கள் ஹாக்கி அணியும் வரலாற்றில் முதல்முறையாக இந்த ஆண்டு ஒலிம்பிக்கின் அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. 100 சதவீதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்- பாபர் அஸாம் சொல்கிறார்
கடந்த கால வரலாற்றை விடுங்கள். நாங்கள் சிறப்பாகத் தயாராகி இருக்கிறோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸாம் தெரிவித்துள்ளார்.
2. மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது: தலீபான்
ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று தலீபான் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
3. இந்திய நீர்மூழ்கி கப்பலை பாகிஸ்தான் தடுத்து நிறுத்தியதா?
கடந்த 16 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையாதவாறு இந்திய நீர்மூழ்கிக் கப்பலை தங்கள் நாட்டு கடற்படை தடுத்து நிறுத்தியதாக பாகிஸ்தான் நேற்று கூறியது.
4. கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் - பிரதமர் மோடி
கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு: இந்தியாவிடம் ரூ.3,750 கோடி கடன் கேட்கும் இலங்கை
கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவிடம், இலங்கை ரூ.3,750 கோடி கடன் கேட்டுள்ளது.