ஹாக்கி

காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்திய ஹாக்கி அணி விலகல் :அனுராக் தாக்குர் கண்டனம் + "||" + Hockey India can't unilaterally pull out of CWG, must consult with Government: Anurag Thakur

காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்திய ஹாக்கி அணி விலகல் :அனுராக் தாக்குர் கண்டனம்

காமன்வெல்த் விளையாட்டில் இருந்து இந்திய ஹாக்கி  அணி விலகல் :அனுராக் தாக்குர் கண்டனம்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகுவதை ஹாக்கி இந்தியா அமைப்பு ஒருதலைபட்சமாக முடிவு செய்ததற்கு விளையாட்டுதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி 

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் அடுத்த ஆண்டு ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில்  இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி  அணிகள் பங்கேற்காது என ஹாக்கி இந்தியா அமைப்பு கடந்த 6 ஆம் தேதி அறிவித்தது.

இந்திய அணியினர் இங்கிலாந்தில் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடுமையான விதிமுறை நடைமுறையில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா அமைப்பு தெரிவித்து  இருந்தது. 

இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகுவதை ஹாக்கி இந்தியா அமைப்பு  ஒருதலைப்பட்சமாக முடிவு செய்ததற்கு விளையாட்டுதுறை  அமைச்சர் அனுராக் தாக்கூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

"மத்திய அரசாங்கம் தான் நாட்டின் மிக முக்கியமான  அனைத்து விளையாட்டு போட்டிகளும் நடைபெறுவதற்கு  நிதி வழங்குகிறது.தேசியப் பிரதிநிதித்துவம் தொடர்பான விவகாரங்களில் பேசுவதற்கு அரசுக்கு முழு உரிமை உண்டு.எந்தவொரு கூட்டமைப்பும் இது போன்ற அறிக்கைகளை வழங்குவதற்கு முன்   முதலில் அரசாங்கத்துடன் விவாதிக்க வேண்டும்.ஏனெனில்  அது தேசிய அணி , அது கூட்டமைப்பின் அணி 
அல்ல.இது குறித்து மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையுடன் ஹாக்கி இந்தியா அமைப்பு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.