ஹாக்கி

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான அட்டவணை வெளியீடு + "||" + India start Hockey WC against France

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான அட்டவணை வெளியீடு

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான அட்டவணை வெளியீடு
இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
லாசானே, 

12-வது ஜூனியர் ஆண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 24-ந் தேதி முதல் டிசம்பர் 5-ந் தேதி வரை நடக்கிறது. 

இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று அறிவித்தது. இந்த போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் பெல்ஜியம், சிலி, மலேசியா, தென்ஆப்பிரிக்கா, ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, கனடா, பிரான்ஸ், போலந்து, ‘சி’ பிரிவில் தென்கொரியா, நெதர்லாந்து, ஸ்பெயின், அமெரிக்கா, ‘டி’ பிரிவில் அர்ஜென்டினா, எகிப்து, ஜெர்மனி, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

தொடக்க நாளில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் பெல்ஜியம்-தென்ஆப்பிரிக்கா, மலேசியா-சிலி, ஜெர்மனி-பாகிஸ்தான், கனடா-போலந்து, இந்தியா-பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது எஞ்சிய லீக் ஆட்டங்களில் 25-ந் தேதி கனடாவையும், 27-ந் தேதி போலந்தையும் எதிர்கொள்கிறது.

இதேபோல் தென்ஆப்பிரிக்காவில் டிசம்பர் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறும் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான அட்டவணையும் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, ஜப்பான், ரஷியா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் டிசம்பர் 6-ந் தேதி ரஷியாவையும், 7-ந் தேதி அர்ஜென்டினாவையும், 9-ந் தேதி ஜப்பானையும் சந்திக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மாநில தடகள போட்டி: சென்னை அணி ‘சாம்பியன்’
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 93-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 3 நாட்கள் நடந்தது.
2. 2,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்
2,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்.
3. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிப்பு சர்ப்ராஸ் அகமது இடம்பெறவில்லை
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுக்கு இடம் கிடைக்கவில்லை.
5. உள்ளாட்சி தேர்தலில் எல்லா இடங்களிலும் போட்டியிடுவோம்: சீமான்
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சின்ன போரூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வ.உ.சிதம்பரனார் உருவப்படத்துக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.