தேசிய பெண்கள் சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் :தங்க பதக்கம் வென்றது மத்திய பிரதேச அணி.


தேசிய பெண்கள் சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் :தங்க பதக்கம் வென்றது மத்திய பிரதேச அணி.
x
தினத்தந்தி 1 Nov 2021 10:44 AM GMT (Updated: 1 Nov 2021 10:44 AM GMT)

மத்திய பிரதேச அணி 1-0 என்ற கணக்கில் அரியானா அணியை வீழ்த்தி தங்க பதக்கத்தை தட்டி சென்றது

உத்தரப்பிரதேசம் 

11 வது தேசிய பெண்கள் சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் கடந்த மாதம் தொடங்கியது. லீக் சுற்று போட்டிகளின் முடிவில் மத்தியபிரதேசம் , அரியானா ,பஞ்சாப் ,மகாராஷ்டிரா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

அரையிறுதி போட்டிகளின் முடிவில் மத்தியபிரதேசம் , அரியானா அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. நேற்று நடந்த இறுதி போட்டியில் மத்திய பிரதேச அணியின் நிதி கெர்கெட்டா  ஆட்டத்தின் 9 வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். 

இதற்கு பதில் கோல் அடிக்க முடியாமல் அரியானா வீராங்கனைகள் திணறினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதி வரை அரியானா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் மத்திய பிரதேச அணி  1-0 என்ற கணக்கில்  அரியானா அணியை வீழ்த்தி தங்க பதக்கத்தை தட்டி சென்றது. அரியானா அணி வெள்ளி பதக்கத்தை வென்றது.

வெண்கல பதக்கத்திற்கான மற்றொரு போட்டியில் பஞ்சாப் மற்றும் மராட்டிய அணிகள் மோதின . இந்த போட்டியில் பஞ்சாப் அணி 2-1 என்ற கணக்கில் மராட்டிய அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றது .

Next Story