ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : பயிற்சி முகாமில் இந்திய அணியினர்


ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : பயிற்சி முகாமில் இந்திய அணியினர்
x
தினத்தந்தி 14 Nov 2021 9:54 AM GMT (Updated: 14 Nov 2021 9:54 AM GMT)

ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி வங்காளதேசத்தின் டாக்காவில் அடுத்த மாதம் தொடங்குகிறது.

புவனேஸ்வர்,

ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி வங்காளதேசத்தின் டாக்காவில் அடுத்த மாதம் தொடங்குகிறது.இதற்கு தயாராகும் இந்திய அணியினருக்கான பயிற்சி முகாம் ஒடிசாவின் புவனேஸ்வரில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது.

இந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெறாத வீரர்கள் ஏற்கனவே பயிற்சி முகாமிற்கு வந்து சேர்ந்த உள்ள நிலையில்  , வெண்கல பதக்கம் வென்ற அணியில் இடம்பெற்று இருந்த வீரர்கள் அடுத்ததடுத்த நாட்களில் அந்த முகாமில் சேரவுள்ளனர்.

இதில் இந்திய அணியின் மன்பிரீத் மற்றும் ஸ்ரீஜேஷ் ஆகியோருக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது ஜனாதிபதி மாளிகையில் நேற்று வழங்கப்பட்டது.

இவர்களை தவிர டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் ஹர்மன்பிரீத் சிங், தில்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், சுரேந்தர் குமார், நீலகண்ட சர்மா, சுமித், ஹர்திக் சிங், சிம்ரன்ஜீத் சிங், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், ஷம்ஷேர் சிங், லலித் குமார் உபாத்யாய் மற்றும் வருண் குமார் ஆகியோருக்கு நேற்று அர்ஜுனா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story