ஹாக்கி

குழந்தையை விட்டு பிரிய மனம் இல்லை..இந்திய ஹாக்கி அணி கேப்டனின் உருக்கமான பதிவு + "||" + Indian Hockey Captain Manpreet Singhs Emotional Goodbye To Newborn Daughter Goes Viral

குழந்தையை விட்டு பிரிய மனம் இல்லை..இந்திய ஹாக்கி அணி கேப்டனின் உருக்கமான பதிவு

குழந்தையை விட்டு பிரிய மனம் இல்லை..இந்திய ஹாக்கி அணி கேப்டனின் உருக்கமான பதிவு
இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்கிற்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது ஜனாதிபதி மாளிகையில் கடந்த சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டது
டெல்லி 

ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி வங்காளதேசத்தின் டாக்காவில் அடுத்த மாதம் தொடங்குகிறது.இதற்கு தயாராகும் இந்திய அணியினருக்கான பயிற்சி முகாம் ஒடிசாவின் புவனேஸ்வரில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது.

இந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெறாத வீரர்கள் ஏற்கனவே பயிற்சி முகாமிற்கு வந்து சேர்ந்த உள்ள நிலையில்  , வெண்கல பதக்கம் வென்ற அணியில் இடம்பெற்று இருந்த வீரர்கள் இன்னும் இரண்டு நாட்களில் அந்த முகாமிற்கு வந்து சேரவுள்ளனர் .

இதில் இந்திய அணியின் கேப்டன்  மன்பிரீத் சிங்கிற்கு  மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது ஜனாதிபதி மாளிகையில் கடந்த சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டது.

மன்பிரீத் சிங் - நாஜ்வா  ஜோடிக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது. இந்த விருதை வாங்கிய பின் வீடு திரும்பிய அவர் இந்திய அணியினருக்கான பயிற்சி முகாமிற்கு கிளம்பும் முன் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தந்து டுவீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் , எனது குழந்தை பிறந்த பிறகு முதல் தேசிய முகாம் , இவளை விட்டு பிரிய மனம் இல்லை என குறிப்பிட்டுள்ளார் . 

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் ஹாக்கி மகளிர் போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.
2. ஒலிம்பிக்: ஜப்பானை வீழ்த்தி இந்திய ஆடவர் ஆக்கி அணி வெற்றி
ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி லீக் சுற்று போட்டியில் ஜப்பானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது.