ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி; இந்திய பெண்கள் அணிக்கு சவிதா கேப்டன்


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி; இந்திய பெண்கள் அணிக்கு சவிதா கேப்டன்
x
தினத்தந்தி 19 Nov 2021 8:31 PM GMT (Updated: 19 Nov 2021 8:31 PM GMT)

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய பெண்கள் அணிக்கு கோல் கீப்பர் சவிதா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி தென்கொரியாவில் உள்ள டோங்ஹாவில் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, இந்தியா, தாய்லாந்து, மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தாய்லாந்தை (டிச.5) சந்திக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வழக்கமான கேப்டன் ராணி ராம்பாலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கோல் கீப்பர் சவிதா கேப்டனாகவும், தீப் கிரேஸ் எக்கா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜூனியர் உலக கோப்பை போட்டிக்கான அணிக்கு தேர்வாகி இருக்கும் லால்ரெம்சியாமி, ஷர்மிளா தேவி, சலிமா ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

Next Story