‘ஒற்றுமையும் பிணைப்பும் தான் எங்கள் வெற்றிக்கான காரணம்’ - ஜூனியர் ஹாக்கி அணியின் கேப்டன்


‘ஒற்றுமையும் பிணைப்பும் தான் எங்கள் வெற்றிக்கான காரணம்’ - ஜூனியர் ஹாக்கி அணியின் கேப்டன்
x
தினத்தந்தி 20 Nov 2021 9:39 AM GMT (Updated: 20 Nov 2021 9:48 AM GMT)

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நவம்பர் 24ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.


புவனேஷ்வர்,

12-வது ஜூனியர் உலக கோப்பை  ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில்  உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வருகிற 24-ந் தேதி முதல் டிசம்பர் 5-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.இதில் நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

அதில் பங்கேற்கும் இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் கேப்டனாக விவேக் சாகர் பிரசாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்க ஆட்டத்தில், இந்தியா பிரான்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.


டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், இந்திய தேசிய ஹாக்கி அணியினர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினர். இந்திய அணியில் இடம்பெற்று இருந்தவர்களில் 21 வயதான  விவேக் சாகர் பிரசாத்தும் ஒருவர் ஆவார். 

அவர் முதன்முறையாக 2017ம் ஆண்டு  சுல்தான் ஆப் ஜோஹோர் கோப்பை தொடரில், இந்திய ஜூனியர் ஹாக்கி அணியை வழிநடத்தினார். அந்த தொடரில் இந்திய அணி மூன்றாம் இடம் பிடித்து அசத்தியது. அவருடைய சிறந்த ஆட்டத்திறனை பாராட்டி அவருக்கு ‘சிறந்த இளம் வீரருக்கான விருதும்’ வழங்கப்பட்டது.

அதன்பின், 2018ம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் குறித்து அவர் கூறுகையில், 

“2018, 2019ம் ஆண்டுகளில் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி சிறப்பாக செயல்பட்டது. ஒற்றுமையும் அணியில் இரூக்கும் பிணைப்பும் தான் எங்கள் வெற்றிக்கான காரணம். ஆனால், 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டோம்.

இந்திய அணி வீரர்கள் பயிற்சி பெற்று தயாராக இருக்கின்றனர். இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடர் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. நிச்சயமாக, கோப்பையை வெல்லுவோம்” என்று கூறியுள்ளார். 

இந்திய அணி  தனது இரண்டாவது ஆட்டத்தில் நவம்பர் 25 அன்று கனடாவை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து இந்திய அணி நவம்பர் 27-ம் தேதி போலந்து அணியுடன் மோதுகிறது. இந்த உலக கோப்பையின் நாக் அவுட் போட்டிகள் டிசம்பர் 1 முதல் 5 வரை தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story