ஹாக்கி

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வருகை + "||" + Pakistan Hockey Team Arrives In Bhubaneswar For Junior World Cup

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வருகை

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி  தொடரில்  பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வருகை
ஜூனியர் உலக கோப்பை போட்டித்தொடர் இந்தியாவில் நடப்பது இது மூன்றாவது முறையாகும்.

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நவம்பர் 24 முதல் டிசம்பர் 5 வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அணிகள் இந்தியா வந்துவிட்டன. இந்த நிலையில், பாகிஸ்தான் ஜூனியர் ஹாக்கி அணியும் இந்தியாவுக்கு நேற்று வருகை  தந்தது.  

2018- ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் ஆண்கள் ஜூனியர் ஹாக்கி அணி புவனேஷ்வர் வந்தடைந்தது. பாகிஸ்தான் ஹாக்கி அணி கடைசியாக 2018ஆம் ஆண்டு சீனியர் உலகக் கோப்பைக்காக இந்தியா வந்திருந்தது. 

ஜூனியர் உலக கோப்பை போட்டித்தொடர் இந்தியாவில் நடப்பது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே கடந்த 2013 ஆம் ஆண்டு புதுடெல்லியிலும் 2016-ல் லக்னோவிலும் இந்த போட்டித்தொடர் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.