ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி : முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா வெற்றி


ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி : முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா வெற்றி
x
தினத்தந்தி 3 Dec 2021 3:39 PM GMT (Updated: 2021-12-03T21:15:02+05:30)

கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.

புவனேஸ்வர் ,

12-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்த உலக கோப்பை  தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று மாலை நடைபெற்றது. 

கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின. பரப்பரபாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில்  கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வாய்ப்பில் அர்ஜென்டினா 3 கோல்களும், பிரான்ஸ் ஒரு கோலும் அடித்தது. இதனால் அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இதனால் பிரான்ஸ் அணியின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது.

Next Story