ஹாக்கி

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி : முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா வெற்றி + "||" + Junior Hockey Worldcup : Argentina beats France

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி : முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா வெற்றி

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி : முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா வெற்றி
கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.
புவனேஸ்வர் ,

12-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்த உலக கோப்பை  தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று மாலை நடைபெற்றது. 

கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின. பரப்பரபாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில்  கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வாய்ப்பில் அர்ஜென்டினா 3 கோல்களும், பிரான்ஸ் ஒரு கோலும் அடித்தது. இதனால் அர்ஜென்டினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இதனால் பிரான்ஸ் அணியின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அர்ஜென்டினாவில் ரிக்டர் அளவில் 6.6 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
2. ரூ.70 கோடிக்கு ஏலம் போன கால்பந்து ஜாம்பவான் மரடோனா டீசர்ட்-யின் பின்னணி என்ன தெரியுமா?
மரடோனாவின் புகழ்பெற்ற டீசர்ட் ஒன்று லண்டனில் உள்ள ஏல நிறுவனத்தால் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.
3. இந்தியா-பிரான்ஸ் கடற்படைகள் இடையே ‘வருணா 2022’ முதற்கட்ட பயிற்சி இன்று நிறைவு
இந்தியா-பிரான்ஸ் ஆகிய இருநாட்டு கடற்படைகள் இடையே ‘வருணா 2022’ என்ற கூட்டுப்பயிற்சி நடத்தப்படுகிறது.
4. 4-வது ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசியை செலுத்தத் தொடங்கிய பிரான்ஸ்..!!
பிரான்சில் 4-வது ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படுகிறது.
5. 22 வருடம் உலகத்தை சுற்றிய குடும்பம் வீடு திரும்பியது...!
அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு குடும்பம் 22 வருடம் உலகத்தை சுற்றிய குடும்பம் நாடு திரும்பியது, அவர்களது ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு நாட்டில் பிறந்துள்ளது.