ஹாக்கி

சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி: இந்தியா-தென்கொரியா இன்று மோதல் + "||" + Champions Trophy Women hockey: India-South Korea clash today

சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி: இந்தியா-தென்கொரியா இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி: இந்தியா-தென்கொரியா இன்று மோதல்
சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி இன்று தென்கொரியாவை எதிர்கொள்கிறது.
டாங்கே,

6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி தென்கொரியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் லீக் சுற்றில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 

இந்த போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனும், உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் அணியான இந்தியா, நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள அணியான தென்கொரியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 13-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை பந்தாடியது. தென்கொரியா அணி 2 ஆட்டத்தில் ஆடி ஒரு வெற்றி (தாய்லாந்துக்கு எதிராக), ஒரு தோல்வி (ஜப்பானிடம்) கண்டுள்ளது.

இரு அணிகளும் 2-வது வெற்றியை ருசிக்க மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது

தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான தொடர்: இந்திய அணி அறிவிப்பு
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற முடியாது, தோல்வியால் பயப்பட வேண்டாம் - ரவி சாஸ்திரி
இந்திய அணிக்கு இது ஒரு தற்காலிக கால கட்டமே என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
3. முதலாவது ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 297 ரன்கள் வெற்றி இலக்கு..!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு 297 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் : இந்திய அணிக்கு அபராதம்
முதலாவது டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது
5. செஞ்சூரியன் டெஸ்டில் வரலாற்று வெற்றி : இந்திய அணிக்கு ராகுல் காந்தி வாழ்த்து
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்