தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி அறிவிப்பு


தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Dec 2021 8:28 PM GMT (Updated: 10 Dec 2021 8:28 PM GMT)

தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 30 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. தமிழக அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. தமிழக அணி தனது லீக் ஆட்டங்களில் வருகிற 14-ந் தேதி தெலுங்கானாவையும், 16-ந் தேதி இமாச்சலபிரதேசத்தையும் எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அணி வருமாறு:-

சதீஷ் (கேப்டன்), வி.சண்முகம், என்.செந்தில்குமார், தனுஷ் எச்.ஷியாம்குமார், பிருத்வி, என்.ரமேஷ், சில்வர் ஸ்டாலின், ரகுராம், ஜோஷ்வா பெனடிக்ட் வெஸ்லி, செந்தமிழ் அரசு (கோல்கீப்பர்), மாரீஸ்வரன், தினேஷ்குமார், சண்முகம், அருண் பிரசாத், முத்துசெல்வன், கார்த்தி, சுந்தரபாண்டியன், தலைமை பயிற்சியாளர்: சார்லஸ் டிக்சன், உதவி பயிற்சியாளர்: முத்துகுமரன், மானேஜர்: கிளமென்ட் லூர்துராஜ். தமிழக ஆக்கி அணியினர் இன்று புனே புறப்படுகிறார்கள்.

இதையொட்டி அவர்களுக்கு வழியனுப்பு விழா சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு அணி வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை (கிட்ஸ்) வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆக்கி சங்க தலைவர் சேகர் மனோகரன், நிர்வாகிகள் ராஜராஜன், திருமால்வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story