ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு முதல் வெற்றி


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு முதல் வெற்றி
x
தினத்தந்தி 15 Dec 2021 8:17 PM GMT (Updated: 2021-12-16T01:47:56+05:30)

2-வது லீக் ஆட்டத்தில் 9-0 கோல் கணக்கில் வங்காளதேசத்தை இந்திய அணி பந்தாடியது.

டாக்கா,

5 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் தென்கொரியாவுடன் டிரா (2-2) கண்டு இருந்த நடப்பு சாம்பியன் இந்திய அணி நேற்று தனது 2-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் மோதியது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 9-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை பந்தாடி முதல் வெற்றியை பதிவு செய்தது. 

இந்திய அணி தரப்பில் தில்பிரீத் சிங் 3 கோலும் (12-வது, 22-வது, 45-வது நிமிடம்), ஜர்மன்பிரீத் சிங்2 கோலும் (33-வது, 43-வது நிமிடம்), லலித் உபாத்யாய் (28-வது நிமிடம்), ஆகாஷ்தீப் சிங் (54-வது நிமிடம்), மன்தீப் மோர் (55-வது நிமிடம்), ஹர்மன்பிரீத் (57-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர். தென்கொரியா-ஜப்பான் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பரம எதிரியான பாகிஸ்தானுடன் (மாலை 3.30 மணி) மல்லுகட்டுகிறது.

Next Story