ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி : இந்தியா-ஜப்பான் அணிகள் இன்று மோதல்


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி : இந்தியா-ஜப்பான் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 19 Dec 2021 12:55 AM GMT (Updated: 19 Dec 2021 12:55 AM GMT)

இதில் இன்று நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானை சந்திக்கிறது.

டாக்கா

5 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் இன்று  நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானை (மாலை 3.30 மணி) சந்திக்கிறது. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் தென்கொரியாவுடன் (2-2) டிரா கண்டது. அடுத்த ஆட்டங்களில் 9-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தையும், 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானையும் தோற்கடித்து வலுவான நிலையை எட்டி இருக்கிறது.

 ஜப்பான் அணி தனது முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் (0-0), தென்கொரியா (3-3) அணிகளுடன் டிரா செய்தது. அடுத்த ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வென்றது. ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்ட இந்திய அணி தனது வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. அத்துடன் கடைசியாக டோக்கியோ ஒலிம்பிக்கில் லீக் சுற்றில் இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை விரட்டியடித்து இருந்தது. 

அந்த ஆதிக்கத்தை தொடரவும் இந்திய அணி முயற்சிக்கும். அதே சமயம் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்ட ஜப்பான அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Next Story