ஹாக்கி

ஆசிய கோப்பை ஆக்கி: கடைசி லீக்கில் ஜப்பானை பந்தாடியது இந்தியா + "||" + India thrash Japan 6-0 in Asian Champions Trophy Hockey

ஆசிய கோப்பை ஆக்கி: கடைசி லீக்கில் ஜப்பானை பந்தாடியது இந்தியா

ஆசிய கோப்பை ஆக்கி: கடைசி லீக்கில் ஜப்பானை பந்தாடியது இந்தியா
ஆசிய கோப்பை ஆக்கி போட்டியின் கடைசி லீக்கில் இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
டாக்கா, 

5 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று ஜப்பானை எதிர்கொண்டது.

 தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி கோல் மழை பொழிந்து ஜப்பானை நிலைகுலைய வைத்தது. ஹர்மன்பிரீத் சிங் (10 மற்றும் 53 நிமிடம்), தில்பிரீத் சிங் (23-வது நிமிடம்), ஜெரம்பிரீத் சிங் (34-வது நிமிடம்), சுமித் (46-வது நிமிடம்), ஷம்ஷிர் சிங் (54-வது நிமிடம்) ஆகிய இந்திய வீரர்கள் கோல் போட்டனர். ஜப்பானால் கடைசி வரை ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை. முடிவில் இந்தியா 6-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை ஊதித்தள்ளியது. 

ஏற்கனவே அரைஇறுதியை உறுதி செய்து விட்ட இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி (ஹாட்ரிக்) இதுவாகும். தனது தொடக்க லீக்கில் தென்கொரியாவுடன் ‘டிரா’ கண்ட இந்திய அணி அதன் பிறகு வங்காளதேசம், பாகிஸ்தானை பந்தாடியது குறிப்பிடத்தக்கது.

லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), தென்கொரியா (6 புள்ளி), பாகிஸ்தான் (5 புள்ளி), ஜப்பான் (5 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. 4 ஆட்டங்களிலும் தோற்ற வங்காளதேசம் வெளியேறியது.

நாளை நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் தென்கொரியா- பாகிஸ்தான், இந்தியா- ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா மேலும் ஒரு உலக கோப்பை வெல்வதை பார்க்க விரும்புகிறேன் - சச்சின் பேட்டி
இந்தியா மேலும் ஒரு உலக கோப்பை வெல்வதை பார்க்க விரும்புவதாக சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
2. இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா தடுப்பு வளையம் பாதுகாப்பாக இல்லை- ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மீது இந்திய பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பே காரணம் என்று பயிற்சியாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
4. பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி தென்கொரியாவிடம் தோல்வி
பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தென்கொரியாவிடம் தோல்வி அடைந்தது.
5. மிரட்டும் கொரோனா; இந்தியாவில் 4 கோடியை கடந்த பாதிப்பு!!
அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை உள்ளது.