ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி + "||" + India suffer 3-5 defeat against Japan in semi-final, will play Pakistan in 3rd place play-off

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி
எளிதில் வெற்றி பெற்று இறுதிசுற்றுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்த்து காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
டாக்கா,

5 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), தென்கொரியா (6 புள்ளி), பாகிஸ்தான் (5 புள்ளி) மற்றும் ஜப்பான்(5 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. 

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஆசிய விளையாட்டு தொடரின் சாம்பியனான ஜப்பானை எதிர்கொண்டது. 

மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி லீக் ஆட்டங்களில் வங்காளதேசம், பாகிஸ்தான், ஜப்பான் என அடுத்தடுத்து துவம்சம் செய்து நல்ல நம்பிக்கையுடன் களமிறங்கியது. 

மறுமுனையில் ஜப்பான் அணி, வங்காளதேசத்தை மட்டுமே தோற்கடித்து, பாகிஸ்தான் மற்றும் தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டங்களை டிரா மட்டுமே செய்தது. இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஒரு கோல் கூட திருப்ப முடியாமல் சரண் அடைந்த ஜப்பான் அணி பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்கொண்டது.

இந்திய ஆக்கி அணி எளிதில் வெற்றி பெற்று இறுதிசுற்றுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்த்து காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

லீக் சுற்று போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக இந்திய அணியை 5-3 என்னும் கோல் கணக்கில் வீழ்த்தியது ஜப்பான். இதன்மூலம், ஜப்பான் ஆக்கி அணி இறுதிசுற்றுக்கு முன்னேறியது.

முன்னதாக நடைபெற்ற முதலாவது அரைஇறுதி போட்டியில் தென்கொரிய அணி 6-5 என்னும் கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம், இந்திய அணி மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேச தேர்தல், இந்தியாவின் எதிர்காலத்தை முடிவு செய்யும்..! - அமித்ஷா
இந்தியாவின் எதிர்காலத்தை 22 கோடி வாக்காளர்களை கொண்ட உத்தரபிரதேச தேர்தல் முடிவு செய்யும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
2. இந்திய அணியின் இந்த இரு வீரர்களால்தான் பாக். அணிக்கு கடும் நெருக்கடி: முகமது ஹபீஸ்
இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது வீரர்களுக்கும் கடும் நெருக்கடி இருக்கும் என்று ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.
3. ஜோகன்னஸ்பெர்க் டெஸ்ட்: 3ம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 188/6
இந்தியா 161 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
4. டெல்லியில் வேகமெடுக்கும் ஒமைக்ரான்: இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 213 ஆக உயர்வு...!!
இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 213 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: அரையிறுதியில் இந்தியா-ஜப்பான் இன்று மோதல்
இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும்.