ஹாக்கி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: வெண்கலம் வென்றது இந்தியா! + "||" + India beat Pakistan 4-3 to win bronze medal

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: வெண்கலம் வென்றது இந்தியா!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: வெண்கலம் வென்றது இந்தியா!
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது இந்திய ஆக்கி அணி.
டாக்கா,

5 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), தென்கொரியா (6 புள்ளி), பாகிஸ்தான் (5 புள்ளி) மற்றும் ஜப்பான்(5 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. 

லீக் சுற்று போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக இந்திய அணியை 5-3 என்னும் கோல் கணக்கில் வீழ்த்தியது ஜப்பான். இதன்மூலம், ஜப்பான் ஆக்கி அணி இறுதிசுற்றுக்கு முன்னேறியது.

முன்னதாக நடைபெற்ற முதலாவது அரைஇறுதி போட்டியில் தென்கொரிய அணி 6-5 என்னும் கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. 

இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் 4 கோல்களை அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இறுதியில், 4-3 எனும் கோல் கணக்கில் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து வெண்கல பதக்கத்தை வென்றது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா மேலும் ஒரு உலக கோப்பை வெல்வதை பார்க்க விரும்புகிறேன் - சச்சின் பேட்டி
இந்தியா மேலும் ஒரு உலக கோப்பை வெல்வதை பார்க்க விரும்புவதாக சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
2. இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா தடுப்பு வளையம் பாதுகாப்பாக இல்லை- ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மீது இந்திய பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பே காரணம் என்று பயிற்சியாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
4. பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி தென்கொரியாவிடம் தோல்வி
பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தென்கொரியாவிடம் தோல்வி அடைந்தது.
5. மிரட்டும் கொரோனா; இந்தியாவில் 4 கோடியை கடந்த பாதிப்பு!!
அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை உள்ளது.