ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தென்கொரிய அணி ‘சாம்பியன்’


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: தென்கொரிய அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 22 Dec 2021 11:39 PM GMT (Updated: 22 Dec 2021 11:39 PM GMT)

தென்கொரிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை சாய்த்து சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக கைப்பற்றியது.



டாக்கா, 

5 அணிகள் பங்கேற்ற 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பான் அணி, தென்கொரியாவை சந்தித்தது. திரிலிங்கான இந்த ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி தென்கொரிய வீரர் ஜோங்யுன் ஜாங் கோல் திருப்பியதால் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. 

இதைத்தொடர்ந்து நடந்த பெனால்டி ஷூட்-அவுட்டில் தென்கொரிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை சாய்த்து சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக கைப்பற்றியது.

Next Story