ஹாக்கி

பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி: பயிற்சி முகாமை தொடங்கிய இந்திய அணி + "||" + Senior Indian womens hockey camp starts with 60 players

பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி: பயிற்சி முகாமை தொடங்கிய இந்திய அணி

பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி: பயிற்சி முகாமை தொடங்கிய இந்திய அணி
60 பேர் பங்கேற்றுள்ள இந்த பயிற்சி முகாமில் பல்வேறு கட்டங்களுக்கு பிறகு 33 வீராங்கனைகள் அடுத்த கட்டத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
பெங்களூரு,

பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள்  அடுத்த வருடம் ஜூலை மாதத்தில் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி போட்டிகளும் நடைபெற இருக்கின்றன.இந்த தொடர்களுக்கு தயாராகும் விதமாக இந்திய பெண்கள் ஹாக்கி அணி பெங்களூருவில் தங்களது பயிற்சியை இன்று தொடங்கியுள்ளனர்.

60 பேர் பங்கேற்றுள்ள இந்த பயிற்சி முகாமில்  பல்வேறு கட்டங்களுக்கு பிறகு 33 சிறந்த வீராங்கனைகள் இறுதியாக அடுத்த கட்டத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேசிய அளவிலான போட்டிகளில் சிறந்த பங்களிப்பை அளித்த வீராங்கனைகளும் , ஏற்கனவே இந்திய சீனியர் அணியில் இருக்கும் வீராங்கனைகளும் இந்த முகாமில் பங்கேற்றுள்ளனர்.

இது குறித்து இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் துணை பயிற்சியாளர் ஜன்னெகே ஸ்கோப்மேன் கூறியதாவது:

பல்வேறு புதிய வீராங்கனைகளின் திறமையை பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். அடுத்த சில வாரங்கள் மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டிகளுக்கும் அதை தொடர்ந்து நடைபெற இருக்கும் முக்கிய தொடர்களுக்கும்  சிறந்த 33 வீராங்கனைகளை தேர்வு செய்வது முக்கியமானதாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-சீனா இடையே விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை-மத்திய அரசு தகவல்
இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.
2. இந்தியாவிடம் இருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்கும் பிலிப்பைன்ஸ்.. ஒப்பந்தம் கையெழுத்து..!
இந்தியாவிடம் இருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது
3. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று குறைவு
இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 15.88 சதவிகிதமாக உள்ளது.
4. இந்தியா-மத்திய ஆசிய நாடுகள் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு - பிரதமர் மோடி வலியுறுத்தல்
பிராந்திய பாதுகாப்புக்கு இந்தியா-மத்திய ஆசிய நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
5. ஹாக்கி ஜாம்பவான் சரண்ஜித் சிங் மாரடைப்பால் மரணம்
1964-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக சரண்ஜித் சிங் இன்று மரணமடைந்தார்.