பெங்களூரு: ‘சாய்’ மையத்தில் 32 ஆக்கி வீரர், வீராங்கனைகளுக்கு கொரோனா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Jan 2022 11:23 PM GMT (Updated: 21 Jan 2022 11:23 PM GMT)

யாருக்கும் எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் மருத்துவ பரிசோதனையில் சிக்கியுள்ளனர்.

பெங்களூரு, 

பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் ஆக்கி வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர், உதவியாளர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 33 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதில் தேசிய சீனியர் ஆக்கி அணி வீரர்கள் 16 பேர் மற்றும் ஒரு பயிற்சியாளரும் அடங்குவர். இவர்கள் யாருக்கும் எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் மருத்துவ பரிசோதனையில் சிக்கியுள்ளனர். உடனடியாக அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். தென்ஆப்பிரிக்காவில் நடக்க உள்ள புரோ லீக் ஆக்கி போட்டிக்காக வீரர்கள் இங்கு தயாராகி வந்தது குறிப்பிடத்தக்கது.

 இதே போல் ஜூனியர் ஆக்கி வீராங்கனைகள் 15 பேர், ஒரு சீனியர் வீராங்கனை ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Next Story