பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கு இந்தியா தகுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Jan 2022 10:35 PM GMT (Updated: 2022-01-26T04:05:48+05:30)

பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றது.

மஸ்கட், 

8 அணிகள் இடையிலான பெண்களுக்கான 10-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. 

இதில் நடப்பு சாம்பியனான இந்தியா தனது கடைசி லீக்கில் 9-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை பந்தாடியது. குர்ஜித் கவுர் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். லீக் சுற்று நிறைவடைந்த நிலையில் இன்று நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் இந்தியா-தென்கொரியா, ஜப்பான்-சீனா அணிகள் மோதுகின்றன. அரைஇறுதி சுற்றை எட்டிய இ்ந்தியா உள்பட 4 அணிகளும் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தில் ஜூலை மாதம் நடைபெறும் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.


Next Story