பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி தென்கொரியாவிடம் தோல்வி


பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி தென்கொரியாவிடம் தோல்வி
x
தினத்தந்தி 26 Jan 2022 9:51 PM GMT (Updated: 26 Jan 2022 9:51 PM GMT)

பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தென்கொரியாவிடம் தோல்வி அடைந்தது.

மஸ்கட், 

பெண்களுக்கான 10-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, தென்கொரியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் நேகா அடித்த கோல் மூலம் இந்தியா முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

பிற்பாதியில் தென்கொரியா வீராங்கனைகள் அடுத்தடுத்து 3 கோல்கள் போட்டு அதிர்ச்சி அளித்தனர். இதன் பின்னர் 54-வது நிமிடத்தில் இந்தியாவின் லால்ரெம்சியாமி பதில் கோல் திருப்பினார். கடைசி கட்டத்தில் மேலும் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வர இந்தியா எடுத்த முயற்சிக்கு கொரியா வீராங்கனைகள் முட்டுக்கட்டை போட்டனர். 

முடிவில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. இந்தியா அடுத்து 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சீனாவுடன் மோத உள்ளது.

Next Story