புரோ ஆக்கி லீக்: இந்திய அணி அறிவிப்பு


புரோ ஆக்கி லீக்: இந்திய அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Jan 2022 12:17 AM GMT (Updated: 2022-01-28T05:47:15+05:30)

புரோ ஆக்கி லீக் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

புரோ ஆக்கி லீக் போட்டி தொடரில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பிரான்சையும் (பிப்ரவரி 8-ந் தேதி), அடுத்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவையும் (பிப்.9), 3-வது ஆட்டத்தில் பிரான்சையும் (பிப்.12), 4-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவையும் (பிப்.13) சந்திக்கிறது. இந்த ஆட்டங்கள் தென்ஆப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடக்கிறது. 

இந்த போட்டிக்கான இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக மன்பிரீத் சிங் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான அணியில் இடம் பெற்ற 14 வீரர்கள் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். புதுமுக வீரர்களாக ஜூக்ராஜ் சிங் (பஞ்சாப்), அபிஷேக் (அரியானா) ஆகியோர் வாய்ப்பு பெற்றுள்ளனர். மாற்று வீரர்களாக சுராஜ் கார்கெரா, மன்தீப் மோர், ராஜ்குமார் பால், சுமித், குர்சாஹிப்ஜித் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்திய அணி வருமாறு:-

கோல் கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பகதூர் பதாக், பின்களம்: ஹர்மன்பிரீத் சிங் (துணைகேப்டன்), அமித் ரோஹிதாஸ், சுரேந்தர் குமார், வருண்குமார், ஜர்மன்பிரீத் சிங், ஜூக்ராஜ்சிங், நடுகளம்: மன்பிரீத் சிங் (கேப்டன்), நீலகண்ட ஷர்மா, ஹர்திக் சிங், ஜஸ்கரன் சிங், ஷாம்ஷெர் சிங், விவேக் சாகர் பிரசாத், முன்களம்: மன்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், ஆகாஷ்தீப் சிங், ஷிலானந்த் லக்ரா, தில்பிரீத் சிங், அபிஷேக்.

Next Story