பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்


பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம்
x
தினத்தந்தி 29 Jan 2022 12:20 AM GMT (Updated: 29 Jan 2022 12:20 AM GMT)

பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் சீனாவை தோற்கடித்து இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.

மஸ்கட், 

பெண்களுக்கான 10-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்தது. அரைஇறுதியில் தென்கொரியாவிடம் தோல்வி அடைந்த நடப்பு சாம்பியனான இந்திய அணி அடுத்து 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சீனாவுடன் நேற்று மோதியது. 

இதில் அபாரமாக ஆடிய இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்து 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. 13-வது நிமிடத்தில் ஷர்மிளா தேவியும், 19-வது நிமிடத்தில் குர்ஜித் கவுரும் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக்கி வெற்றிக்கு உதவினர்.

இதன் இறுதிப்போட்டியில் ஜப்பான் 4-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் கோப்பையை கையில் ஏந்தியது.

Next Story