தென் மண்டல ஆக்கி: சேலஞ்சர்ஸ் அணி 'சாம்பியன்'


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 4 May 2022 11:01 PM GMT (Updated: 4 May 2022 11:01 PM GMT)

தென் மண்டல ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.

சென்னை,

செயின்ட் பால்ஸ் கிளப் சார்பில் தென் மண்டல ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த வருமான வரி-சேலஞ்சர்ஸ் கிளப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

விறுவிறுப்பான இந்த மோதலில் சேலஞ்சர்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் வருமான வரியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. சேலஞ்சர்ஸ் அணியில் ஜீவகுமார், செந்தில் நாயகம், சுனில் மூர்த்தி ஆகியோர் கோல் அடித்தனர். 

வருமான வரி தரப்பில் மகேந்திரன், தருண்குமார் தலா ஒரு கோல் திருப்பினர். பின்னர் நடந்த பரிசளிப்புவிழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்ற சேலஞ்சர்ஸ் அணிக்கு கோப்பையுடன் ரூ.30 ஆயிரமும், 2-வது இடம் பிடித்த வருமான வரி அணிக்கு ரூ.20 ஆயிரமும் பரிசாக வழங்கினார். 

சென்னை மாவட்ட ஆக்கி சங்கதலைவர் வி.பாஸ்கரன், செயலாளர் எம்.எஸ்.உதயகுமார். போட்டி அமைப்பு குழு செயலாளர் அலெக்சாண்டர் கொர்னோலியஸ் உள்பட பலர்விழாவில் கலந்து கொண்டனர்.

Next Story