ஆசிய கோப்பை போட்டி: இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ரூபிந்தர் பால் சிங் விலகல்


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 13 May 2022 10:59 PM GMT (Updated: 2022-05-14T04:29:59+05:30)

ஆசிய கோப்பை போட்டியில் இருந்து இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ரூபிந்தர் பால் சிங் விலகியுள்ளார்.

பெங்களூரு, 

11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் வருகிற 23-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. 

இந்த போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 23-ந் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த ரூபிந்தர் பால் சிங் பயிற்சியின் போது மணிக்கட்டில் காயம் அடைந்தார். இதனால் அவர் இந்த போட்டியில் இருந்து நேற்று விலகினார். இதனை ஆக்கி இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது. 

துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்த பிரேந்திர லக்ரா கேப்டனாகவும், எஸ்.வி.சுனில் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபிந்தர் பால் சிங்குக்கு மாற்றாக நீலம் சன்ஜீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் ஓய்வு பெறுவதாக அறிவித்த ரூபிந்தர் தனது முடிவை மாற்றி மீண்டும் அணிக்கு திரும்பினார் என்பது நினைவுகூரத்தக்கது.

Next Story