மேஜர் தயான் சந்த் சிலைக்கு மரியாதை செலுத்திய இந்திய ஆக்கி வீரர்கள்

Image : Hockey India
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியினர் இன்று தாயகம் திரும்பினர்.
புதுடெல்லி,
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆண்கள் ஆக்கி போட்டியில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 2-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியினர் இன்று தாயகம் திரும்பினர். அவர்களுக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திய ஆக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் சிலைக்கு இந்திய ஆக்கி வீரர்கள் மரியாதை செய்தனர்.
Related Tags :
Next Story






