துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 9 Jan 2017 9:45 PM GMT (Updated: 9 Jan 2017 6:59 PM GMT)

* சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில் 35–வது மாநில மூத்தோர் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 2 நாட்கள் நடந்தது. இதில் 25 முதல் 95 வயதுக்கு உட்பட்ட 1,500 பேர் கலந்து கொண்டனர். இதில் ஆண்களுக்கான 80 வயதினருக்கான குண்டு எறிதலில் தூத்துக்குடி மாவ

* 17 வயதுக்கு உட்பட்ட இந்திய கால்பந்து அணி ரஷியாவில் நடந்து வரும் வாலென்டின் கிரானட்கின் நினைவு கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடி வருகிறது. இதன் லீக் சுற்றில் இந்திய அணி, ரஷியாவை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரஷிய அணி 8–0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை எளிதில் தோற்கடித்தது.

* சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில் 35–வது மாநில மூத்தோர் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 2 நாட்கள் நடந்தது. இதில் 25 முதல் 95 வயதுக்கு உட்பட்ட 1,500 பேர் கலந்து கொண்டனர். இதில் ஆண்களுக்கான 80 வயதினருக்கான குண்டு எறிதலில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சித்தரஞ்சன் முதலிடம் பிடித்தார். 55 வயதினருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சென்னையை சேர்ந்த செண்பகமூர்த்தி முதலிடம் பெற்றார். 100 மீட்டர் ஓட்டத்தில் 65 வயதினருக்கான பிரிவில் கன்னியாகுமரியை சேர்ந்த ஜெயசீலனும், 95 வயதினருக்கான பிரிவில் விழுப்புரத்தை சேர்ந்த கண்ணனும் முதலிடம் பிடித்தனர். பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் திருப்பூரை சேர்ந்த எஸ். விஜயலட்சுமி (35 வயது பிரிவு), கடலூரை சேர்ந்த என்.எல்.சி. ஊழியர் ஜெம்மா ஜோசப் (50 வயது பிரிவு), சென்னையை சேர்ந்த டெய்சி விக்டர் (85 வயது பிரிவு) ஆகியோர் முதலிடமும் பெற்றனர்.

* வங்காளதேச கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அந்த அணி டெஸ்ட் போட்டியில் இந்தியாவில் விளையாட இருப்பது இதுவே முதல்முறையாகும். இந்த டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் பிப்ரவரி 8–ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை நடந்த ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மறுத்து விட்டது என்று செய்தியை ஐதராபாத் கிரிக்கெட் சங்க செயலாளர் ஜான் மனோஜ் மறுத்து இருக்கிறார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ‘ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை நடத்த தயாராக இருக்கிறது. எங்களிடம் எந்தவித நிதி தட்டுப்பாடும் கிடையாது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் தகுதி இழந்த சில இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இதுபோன்ற வதந்தியை பரப்பி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் 32 வயதான சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ கீபே இடம் பெற்றுள்ளார். இதனால் அவர் பிக்பாஷ் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். சிட்னி சிக்சர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த அவரை உள்ளூர் போட்டியில் விளையாட வேண்டாம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியதை தொடர்ந்து அவர் இந்த விலகல் முடிவை எடுத்து இருக்கிறார்.

* சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6–3, 2–6, 6–4 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் மோனிகா புய்க்கை (புயர்டோரிகா) வீழ்த்தி 2–வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 6–வது இடத்தில் இருக்கும் சிபுல்கோவா (சுலோவக்கியா) 6–2, 6–0 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் லாராவை எளிதில் தோற்கடித்த அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.


Next Story