பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி 2024–ம் ஆண்டு நடக்கிறது

32–வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020–ம் ஆண்டு நடக்கிறது.
பாரீஸ்,
32–வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020–ம் ஆண்டு நடக்கிறது. அதைத் தொடர்ந்து 2024–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமம் கோரி பாரீஸ் நகரமும் (பிரான்ஸ்), லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமும் (அமெரிக்கா) ஒலிம்பிக் கமிட்டியிடம் விண்ணப்பித்தன. மேலும் சில நாடுகள் விருப்பம் தெரிவித்தாலும் பிறகு பின்வாங்கிக் கொண்டன.
இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் முடிவில் போட்டியில் இருந்து விலகிய லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு 2028–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை வழங்குவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 2024–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பாரீஸ் நகரில் நடப்பது உறுதியாகி விட்டது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.