பிற விளையாட்டு

காமன்வெல்த் பளுதூக்குதல்: வேலூர் வீரர் சதீஷ்குமார் தங்கம் வென்றார் + "||" + Commonwealth Development

காமன்வெல்த் பளுதூக்குதல்: வேலூர் வீரர் சதீஷ்குமார் தங்கம் வென்றார்

காமன்வெல்த் பளுதூக்குதல்: வேலூர் வீரர் சதீஷ்குமார் தங்கம் வென்றார்
காமன்வெல்த் சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகிறது.
கோல்டு கோஸ்ட்,

காமன்வெல்த் சீனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 77 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ்குமார் மொத்தம் 320 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் அடுத்த ஆண்டு (2018) ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கும் வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் தகுதி பெற்றார். மேலும், மற்றொரு இந்திய வீரர் ஆர்.வி.ராகுலும் 2018–ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.