பிற விளையாட்டு

துளிகள் + "||" + sports news in thuligal

துளிகள்

துளிகள்
புரோ கபடி: மும்பை, அரியானா அணிகள் வெற்றி சோனிபேட், புரோ கபடி லீக்கில் நேற்றிரவு சோனிபேட்டில் நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்
மும்பை அணி 51-41 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்சை வீழ்த்தி 7-வது வெற்றியை ருசித்தது. மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் 38-31 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது.

இன்றைய ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்- புனேரி பால்டன் (இரவு 8 மணி), அரியானா ஸ்டீலர்ஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

ஹாங்காங் ஸ்குவாஷ்: ஜோஸ்னா தோல்வி

ஹாங்காங் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அந்த நாட்டில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிஆட்டத்தில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, 14-ம் நிலை வீராங்கனையான எகிப்தின் நூர் எல் தயேப்பை சந்தித்தார். இதில் ஜோஸ்னா 4-11, 4-11, 4-11 என்ற நேர்செட்டில் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார்.