பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: புனேயை வீழ்த்தியது பெங்களூரு + "||" + Pro Kabaddi League

புரோ கபடி லீக்: புனேயை வீழ்த்தியது பெங்களூரு

புரோ கபடி லீக்: புனேயை வீழ்த்தியது பெங்களூரு
12 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
சோனிபேட்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சோனிபேட்டில் நேற்றிரவு நடந்த 71-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் 24-20 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை தோற்கடித்தது. தொடர்ச்சியாக 6 தோல்விகளுக்கு பிறகு பெங்களூரு அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். மொத்தத்தில் 13-வது லீக்கில் விளையாடிய பெங்களூரு அணிக்கு இது 4-வது வெற்றியாகும். மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-19 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.